திருவனந்தபுரம், மே 7- மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால் கொரோனா வைரஸ் கால நெ ருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என சிபிஎம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த கொரோனாவுக்கு பிந்தைய சவால்கள் குறித்த ‘கிளவுடு சம்மிட் ஆன் போஸ்ட் கோவிட்’ நிகழ் ச்சியை காணொலி மூலம் துவக்கி வைத்து அவர் பேசுகையில், நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோடு மக்க ளது வாழ்நிலை பரிதாபத்துக்கு உரியதா கிவிட்டது. மாதந்தோறும் ரூ.7500 வீதம் மூன்று மாதங்களுக்காவது அனைவ ருக்கும் வழங்க வேண்டும். கிடங்குக ளில் தேங்கிக் கிடக்கும் 77,000 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தில் 10 கிலோ அரிசி வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு பிந்தைய கேர ளத்தில் கிராமப்புற பொருளாதாரம் புனர மைக்கப்பட வேண்டும்.
தரிசு நிலம் முழுவதும் விவசாயம் செய்வதற்கான அனுமதி அளிக்கும் திட்டத்திற்கு அரசு வடிவம் கொடுக்க வேண்டும். சிறு மற்றும் பாரம்பரிய தொழில்களை வலுப்படுத்த வேண்டும். உலக அள வில் கவனத்தைப் பெற்றுள்ள கேர ளத்தின் சுற்றுலா வாய்ப்புகளை மீட்டெ டுக்க வேண்டும். கொரோனாவுக்கு பிந்தைய கேரளம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த விவா தங்களுக்கும் விரிவான ஆலோசனை களுக்கும் அடித்தளம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது கிளவுடு சம்மிட் ஆன் போஸ்ட் கோவிட்’ நிகழ்ச்சி என்றும் கொடியேரி கூறினார். இந்த காணொலி நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாய்ப்புகள், சுகாதாரம், தொழில், கல்வி, சுற்றுலா, விவசா யம், அச்சு ஊடகங்கள், வேலைவாய்ப்பு, சினிமா மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.
அமைச்சர்கள் கே.கே.சைலஜா, டி.பி.ராமகிருஷ்ணன், கடகம்பள்ளி சுரேந்திரன், கே.டி.ஜலீல், பல்வேறு துறைகளின் வல்லு நர்களான எம்.ஏ.யூசுபலி, சந்தோஷ் ஜார்ஜ் குளங்ஙரா, வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், பி.உண்ணிகி ருஷ்ணன் ஆகியோர் இணைய நேர லையில் பங்கேற்றனர். கலந்துரையாடல்களிலிருந்து வெளி வரும் யோசனைகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நிபுணர் குழு மதி ப்பாய்வு செய்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று டி.ஒய்.எப்.ஐ மாநில செயலாளர் ஏ.ஏ. ரஹீம் தெரி வித்தார். Postcovidkerala@gmail. com என்ற மின்னஞ்சலில் பொதுமக்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.