திருவனந்தபுரம்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது.வெளிநாடுகளுக்கு சென்று வருவோர், கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகம் என்பதால், இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கையும், இந்தியாவின் ஏனையமாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளன.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்புகளில் சுமார் 36 சதவிகிதம் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில்தான் கண்டறியப்பட்டுள்ளன.இந்நிலையில், தொற்றைக்கண்டறிவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது.மார்ச் 22 வரையிலான இந்த கணக்கில், கேரளா 4 ஆயிரத்து 35 பேருக்குகொரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்தியுள்ளது. மகாராஷ்டிரா ஆயிரத்து 666, கர்நாடகம் ஆயிரத்து 387 என்ற அளவில் சோதனைகளை நடத்தியுள்ளன. அதேநேரம், மார்ச் 23 வரை,தமிழ்நாடு 552 சோதனைகளையும்,குஜராத் 422 பரிசோதனைகளையும், ஆந்திரா 178 சோதனைகளையும் நடத்தியுள்ளன. நாட்டிலேயேமிகக் குறைவாக, மேற்குவங்க மாநிலத்தில் 128 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழப்பு இல்லை
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்ட நிலையில், அங்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பாதிப்புகள் கண்டறியப்பட்ட தில்லி, 23 பாதிப்புகள்கண்டறியப்பட்ட பஞ்சாப், 33 பாதிப்புகள் கண்டறியப்பட்ட கர்நாடகம், 7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள மேற்குவங்கம், 30 பாதிப்புகள் கண்டறியப்பட்ட குஜராத், 3 பாதிப்புகள் கண்டறியப்பட்ட இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ‘தலா’ ஒருவர் என மொத்தம் 9 பேர்உயிரிழந்துள்ளனர்.எனினும், கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதில், 88 என்ற எண்ணிக்கையுடன், நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் கேரளத்தில் இன்னும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.