திருவனந்தபுரம், மார்ச்.21- கேரள தேவசம் போர்டு அமைச்சர் கட கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: சபரி மலை ஐயப்பன் கோவில் திருவிழா இம்மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி 28ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். சபரி மலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இதுவரை 9 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. எனவே, இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் திருவி ழாவில் ஆச்சார முறையிலான சடங்குகள் மட்டுமே நடைபெற உள்ளது. பக்தர்க ளுக்கு தரிசன வசதி ஏற்படுத்தப்பட மாட்டாது. ஏப்ரல் 7ஆம் தேதி பம்பையில் நடைபெற உள்ள ஆறாட்டு விழாவின் போதும் பக்தர்க ளுக்கு அனுமதி கிடையாது. அனைத்து பக்தர்களும் இந்த நடவடிக்கைக்கு ஒத்து ழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து இந்த பேராபத்திலிருந்து மீள முயல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.