tamilnadu

img

ஒரே நாளில் 488 பேர் கொரோனா பாதிப்பு பூந்துறையில் 150 படுக்கையுடன் சிகிச்சை மையம் அமைக்க முடிவு

திருவனந்தபுரம், ஜுலை 12- கேரளத்தில் சனியன்று 488 பேரு க்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் 234 பேருக்கு தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சூப்பர் பர வலுக்கு இலக்காகியுள்ள பூந்துறை யில் 150 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்படுவ தாகவும் முதல்வர் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் முதல்வர் மேலும் கூறியதாவது: சனியன்று 143 பேர் குணமடைந்த னர். இரண்டு சுகாதார ஊழியர்கள், ஐ.டி.பி.பி இரண்டு, பி.எஸ்.எப் இரண்டு மற்றும் பி.எஸ்.இ வீரர்கள் நான்கு பேருக்கு கோவிட் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.  சனியன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2104 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளன. 3694 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனி யன்று ஒரேநாளில் மட்டும் 570 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

இதுவரை 2,33,809 மாதிரி கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 6449 மாதிரிகளின் முடிவுகள் நிலு வையில் உள்ளன. முன்னுரிமை பிரிவி லிருந்து 73768 மாதிரிகள் சேகரிக்கப் பட்டன. அதில் 66636 மாதிரிகள் எதிர் மறையாக இருந்தன. மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளின் (ஹாட்ஸ் பாட்டுகள்) எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. 16 புதிய கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டன. இன்று (சனிக்கிழமை) கிடைக்கும் தரவுகள், மாநிலம் முழுவதும் நோய் பரவல் அதிகரிப்பதைக் குறிக்கிறது. திருவனந்தபுரத்தில் சனியன்று 69 பேர் நோய்வாய்ப்பட்டனர். 46 தொடர்பு நோயாளிகள். எங்கிருந்து நோய் தொற்று வந்தது என்று தெரியாத 11 நோயாளிகள் உள்ளனர். மாவட் டத்தில் கண்காணிப்பு தீவிரமாக தொடர்கிறது. ஒன்பது உள்ளாட்சி அமைப்புகளில் நாற்பத்தைந்து வார்டு கள் கண்டோன்மென்ட் மண்டலங்க ளாக மாற்றப்பட்டுள்ளன. சமூக விழிப்புணர்வை அதிகரிக்க, அறி விப்பு வெளியீடு மற்றும் மைக் அறி விப்புகள் செய்யப்படுகின்றன.

இங்கே, கோவிட்டிலிருந்து பாது காப்பை வலுப்படுத்த வருவாய், காவல்துறை மற்றும் சுகாதார அதி காரிகள் அடங்கிய விரைவு பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாவட்டத்தில் 18,828 பேர் வீடுகளிலும் 1901பேர் நிறுவன கண்காணிப்பிலும் உள்ளனர். இதுவரை பூந்துறையில் 1366 ஆன்டிஜென் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 262 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்கிறது. 150 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் விரைவில் அங்கு அமைக்கப்படும். நடமாடும் மருந்தகம் அங்கு செயல்படுகிறது என்றார்.