districts

img

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக விரிவான சிகிச்சை மையம்

சென்னை, ஆக. 18- வளர்ச்சி தாமதம், அறிவு,  நடத்தையியல், உடல்சார்  திறனிழப்புள்ள குழந்தைக ளுக்காக  முதன்முறையாக நவீன தொழில்நுட்ப அடிப் படையிலான சிகிச்சை மையம் பழைய மகாபலி புரம் சாலையில் நிறுவப்பட் டுள்ளது. காவேரி மருத்துவமனை சார்பில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னையில் இருந்து நடிகர் விக்ரம் திறந் துவைத்தார். துரைப் பாக்கத்தில் அமைந்துள்ள இம்மையம் முதுகுத்தண்டு மற்றும் மூளை காயம் மற்றும் பல்வேறு மூளை நரம்பியல் பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்காக சிகிச்சை செயல்திட்டத்தை வழங்கும். ஆட்டிசம், கவனக் குறைபாடு, பேச்சுக் கோளாறு, வளர்ச்சியில் தாமதம், கற்றல் சிரமங் கள், டௌன் சிண்ட்ரோம், மூளைபாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை  அளிக்கப்படும்.   பிரசவத்தின்போது வசதிகள் மற்றும் கவ னிப்பு இல்லாமை, தொற்றுப் பாதிப்பு, ஊட்டச்சத்தின்மை, நகர்ப்புற பரபரப்பான வாழ்க்கைமுறையின் அழுத்தங்கள், தாமதமான கருத்தரிப்பு மற்றும் உத்வேகமளிக்காத சூழல் ஆகியவை உட்பட பல்வேறு காரணங்களினால் இத்தகைய வளர்ச்சி சார்ந்த கோளாறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று  ஹம்சா ரீஹேப்-ன் சிறப்பு கல்வியா ளரும், முதன்மை ஆலோ சகருமான டாக்டர். மரிய ஃபாத்திமா ஜோஸ்பின் கூறுகிறார்.  குழந்தைநல மற்றும் மறுவாழ்வு மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவையும் இப்புதிய மையம் கொண்டிருக்கிறது என்றும் திட்டமிடுவதில் தேசிய மற்றும் சர்வதேச  அளவிலான நெறிமுறை களை  பின்பற்றுவதாகவும்  காவேரி மருத்துவமனை யின்  நிர்வாக இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ்  கூறினார்.