கரூர், டிச.2- கரூர் மாவட்டம், தான்தோன்றி மலையில் உள்ள பாரதிதாசன் நகரில் வசித்து வருபவர் ஜீவானந்தம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது வீட்டில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு இடுப்பு, தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கரூர் 80 அடி சாலையில் இருந்த அபிஷேக் ஆர்த்தோ மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மருத்துவரின் கவனக்குறை வாலும், சேவை குறைபாடான மருத்துவம் செய்ததாலும் ஜீவானந்தத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் சீழ் பிடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போதும், மருத்துவர் முறையான சிகிச்சை அளிக்காததால் ஜீவானந்தம் கோவையில் உள்ள ரிவிசிபி தனியார் மருத்துவமனையில் சுமார் ரூபாய் 10 லட்சம் செலவு செய்து குணமடைந்தார். இந்த நிலையில் மேற்படி மருத்துவரின் மருத்துவ கவனக்குறைவு, சேவைக் குறைபாடான சிகிச்சை சம்பந்தமான கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சு.சுபாஷ் சந்திரபோஸ் என்ற வழக்கறிஞர் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, இரு தரப்பு விசார ணையின் முடிவில் மேற்படி மருத்துவரின் மருத்துவ கவனமின்மை, சேவை குறைபாடு நிரூபிக்கப்பட்டதால் மேற்படி ஜீவானந்தத்திற்கு இழப்பீடாக 7 லட்சத்து 50 ஆயிரமும், வழக்கு தொடர்ந்த நாளிலி ருந்து 7.5% வட்டியும், வழக்கு செலவு தொகை யாக ரூபாய் 5000 மும் இரு மாதத்திற்குள் வழங்க, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.