கரூர், மே 10- கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள், ஏழை, எளிய, தொழிலாளிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் குந்தாணி பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் இடைநிலை ஆசிரியர் சிவகாமி ஆகியோர் தங்களது சொந்த நிதியில் இருந்து இப்பள்ளியில் பயிலக் கூடிய 60 மாணவ, மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ரூ 60 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டச் செய லாளர் ஜெ.ஜெயராஜ் கூறுகையில், இச்சங் கத்தின் உறுப்பினர்கள் சுமதி, சிவகாமி ஆகிய இரண்டு ஆசிரியைகளும் மிகப் பெரிய உதவியை தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு தங்களது சொந்த நிதியிலிருந்து செய்துள்ளனர். அவர்க ளை, ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு வதுடன், அனைவரும் இதுபோன்ற உதவி களை தங்களால் முடிந்த அளவு செய்ய வேண்டும். மேலும் இதே போல் வெள்ளியனை குமாரபாளையம், அரசு நடுநிலைப்பள்ளி யில் தலைமை ஆசிரியர் சகிலா, தனது பிறந்த நாளில் ஏழை, எளிய, தொழிலாளிக ளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளார். இவருக்கு இச்சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.