tamilnadu

img

புதிய பேருந்து நிலையம் அமைத்திடுக! குளித்தலையில் சிபிஎம் உண்ணாவிரதம்

கரூர், ஆக.21- கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும். குளித்தலை அரசு மருத்துவ மனையை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தி மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்களை அதிக அளவில் பணியமர்த்த வேண்டும். குளித்தலை ரயில்வே கேட்டு முதல் உழவர் சந்தை வரை ஆக்கிரமிப்பில் உள்ள புறவழிச் சாலையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே கேட்டில் மேம் பாலம் அமைத்திட வேண்டும். குளித்தலையில் மின்மயானம், தீய ணைப்பு நிலையம் அமைத்திட வேண் டும். இரவு நேரங்களில் புறவழிச்சாலை யில் செல்லும் அனைத்து அரசு பேருந்து களையும் குளித்தலை நகரத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித் தலை ஒன்றியக் குழுவின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் குளித் தலை ஒன்றியச் செயலாளர் எஸ்.பிரபா கரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.ஜெயசீலன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். கே.பாலபாரதி நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செய லாளர் கே.கந்தசாமி, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.ராஜு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் இரா.முத்துச்செல் வன், இளங்கோவன், பி.சத்யபிரியா,  வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் மு.க. சிவா, ஏ.சசிகுமார், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சங்கரநாராய ணன், ரெங்கசாமி, பாண்டியன், கிருஷ் ணசாமி, கன்னியம்மாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.