கரூர், அக்.4- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திரு வேகம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அரசு புறம்போக்கு நில த்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்த னர். அப்போது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த சமூக விரோதி கள் ராதாகிருஷ்ணனை படுகொலை செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிப்பதுடன் சமூக விரோதிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவி யாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் வட்டா ட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.அரசகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, மாவட்டப் பொருளாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் இள ங்கோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வம், தாமோதரன், பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.