கரூர், ஜூலை 22- கரூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் பரிசோத னைகளை கிராம அளவில் விரிவுபடுத்த மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க த்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை விடப்ப ட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் கூறியதா வது: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இந்தியாவிலும், தமிழகத்திலும் தீவிரமாக பரவி வருகிறது. கரூர் மாவ ட்டத்தில் உள்ள கிராமப் பகு திகளில் இருந்து கரூர் நகர பகுதிக்கு கட்டுமானம், ஜவுளி நிறுவனங்கள், டெக்டை ல்ஸ், பேருந்து கட்டுமா னம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் தினந்தோறும் வந்து செல்கி ன்றனர். கிராமத்திலிருந்து வரும் தொழிலாளர்களை பல்வேறு நிறுவனங்கள் தனி வாகனம் மூலம் அழைத்து வந்து விட்டு, அழைத்துச் செல்கின்றனர்.
பெரும்பாலான நிறு வனங்கள் தமிழக அரசு அறி வித்துள்ள அறிவிப்புகளை பின்பற்றாமலும், உரிய இடைவெளியை பின்ப ற்றாமலும் மற்றும் வாக னங்களில் எந்தவித பாது காப்பும் இன்றி கூட்டமாக அடைத்துக்கொண்டு தொ ழிலாளர்களை அழைத்து செல்கின்றனர். இதனால் கிராமப்பகுதிகளில் நோய் தொற்று அதிக அளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நிறுவனங்களை யும், வாகனங்களையும் ஆய்வு செய்யாமலும், பொது மக்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுத்திட எந்த வித நடவடிக்கையும் எடுக்கா மல் அலட்சியமாக செய ல்பட்டு வருகிறது. இதனை அகில இந்திய விவசாய தொ ழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு கண்டிப்ப துடன், இச்செயலை கை விட வேண்டுமென கோரி க்கை விடுக்கிறது.
மேலும் கடந்த ஒரு வார மாக கரூர் நகர பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதி க்கப்பட்டவர்களின் எண்ணி க்கையை விட கிராமப்பு றங்களில் அதிகமாக உள்ளது. கிராம புறங்களில் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இத னால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் போதிய அளவு மருத்துவ பரிசோ தனைகள் செய்வதில்லை என்று தோன்றுகிறது. குறை ந்த அளவே தொற்றுள்ளதாக தினந்தோறும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வரு கின்றது. அதிக அளவில் பரிசோதனை மேற்கொ ண்டால்தான் உண்மை நிலை தெரியவரும். எனவே அதிக அளவில் பரிசோதனைகளை அதி கரிக்க, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நோய் பரவுவதை தடுத்து நிறுத்திட தினந்தோறும் அனைத்து கிராம பகுதிகளிலும் பரி சோதனைகளை அதி கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.