tamilnadu

போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் காலமானார் சிஐடியு கரூர் மாவட்டக்குழு இரங்கல்

கரூர், ஆக.16- சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கத்தின் கரூர் கிளையின் முன்னாள்  தலைவர் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பின் கரூர் கிளையின்  தலைவராக பணியாற்றி வந்த ஏ.கந்தசாமி (71) கரூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஓட்டூநராக கரூர் பணிமினையில் பணிபுரிந்த காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நிர்வா கத்தால் பல நேரங்களில் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிர மத்திற்கு உள்ளாக்கப்பட்டார். பல நேரங்களில் போராட்ட த்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கெல்லாம் கவலை கொள்ளாது கடைசிவரை தொ ய்வில்லாமல் இயக்கப் பணிகளில் ஈடுபட்டவர். பணி நிறைவிற்கு பின் குடும்ப சூழ்நிலை காரணமாக தனி யார் பள்ளி ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டே ஓய்வு  பெற்ற தொழிலாளர்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலு த்தினார். தனது பகுதிகளில் உள்ள முறைசாரா தொழிலா ளர்களை சிஐடியு-வின் கீழ் அணி திரட்டுவதில் பெரும் பங்கா ற்றினார். அவருடைய மறைவு கரூர் மாவட்ட சிஐடியு-விற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவருடைய மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தி னருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் சிஐடியு மாவட்டக்குழு  சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் உரித்தாக்கிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.