பெங்களூரு, ஏப்.14-கர்நாடகா தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கும் கிரிக்கெட் வீரர்ராகுல் திராவிட், ‘உங்கள்வாக்குகளை அளியுங்கள், ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யுங்கள்’ என்று, மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தார். இதனிடையே, ‘பார்ம் - 6’ படிவத்தை ராகுல் திராவிட் குறித்தகாலத்துக்குள் சமர்ப்பிக்காததால் அவரது வாக்கே தற்போது நீக்கப்பட்டுள்ளது.