tamilnadu

img

கௌரி லங்கேஷ் கொலையை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவிற்கு 25 லட்சம் பரிசுத்தொகை

கௌரி லங்கேஷ் கொலையை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவிற்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பத்திரிக்கையாளரும், முற்போக்கு எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் அவரின் வீட்டின் முன்பு துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை அம்மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்தது. இந்த கொலைக்கு காரணமாக சனாதன் சன்ஸ்தான் என்ற சங்பரிவார் இந்து மதவாத அமைப்பு செயல்பட்டது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 18 பேர் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட கொலை கும்பல் எனவும், இந்த கும்பல் கொலையில் சாஸ்திரதர்ம சதானா என்ற புத்தகத்தில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி இருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநில அரசு தீவிரமாக விசாரணை நடத்தியுள்ள சிறப்பு விசாரணை குழுவிற்கு தற்போது 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது.