tamilnadu

img

ராஜினாமாவுக்குத் தயாராகும் ஜேஜேபி எம்எல்ஏக்கள்...? ஹரியானா பாஜக அரசு கவிழ்கிறது...

சண்டிகர்:
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் மிகப் பெரிய கொந்தளிப்புடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மசோதாக்களை திரும்பப் பெறும்வரை ஓயமாட்டோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒரு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக-வுக்கு எதிராக நிலையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இதில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மசோதாவை பகிரங்கமாக எதிர்த்து வரும் நிலையில், பாஜக-வின்கூட்டணியிலிருக்கும் மாநிலக்கட்சிகளான சுக்பீர் சிங் தலைமையிலான சிரோமணி அகாலிதளம், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி) ஆகியவை சிக்கலில் மாட்டின. பின்னர், விவசாயிகளின் எழுச்சியைப் பார்த்த அகாலிதளம், ஜேஜேபி கட்சிகள், தாங்களும் மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்தன.விவசாயிகளின் போராட்டங்களிலும் கலந்து கொள்ளத்துவங்கின.அகாலிதளம் ஒரு கட்டத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து அதிரடியாக விலகியது. உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக ஹர் ஷிம்ரத் கவுர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ஜேஜேபி கட்சியும் ஹரியானா பாஜக அரசிலிருந்து விலகுமா? துஷ்யந்த் சவுதலா தனது துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய் வாரா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், ஹரியானாவிவசாயிகளின் போராட்டத் தில் ஜேஜேபி எம்எல்ஏ-க்கள்ஜோஹி ராம் சிகாஹ், ராம் கரண் காலா ஆகியோர் தங்களுடைய தொகுதி மக்கள் கேட்டுக்கொண்டால் எம்எல்ஏ பதவிவிலகத் தயார் என அறிவித் துள்ளனர். இது மனோகர் லால் கட்டார் அரசுக்கு சிக் கலை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானாவில் ஜேஜேபி கட்சியின் 10 எம்எல்ஏ-க்கள்ஆதரவில்தான் பாஜக ஆட்சிநடக்கிறது. அவ்வாறிக்கையில், ஜேஜேபி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலோ, எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்தாலோ அந்த அரசு கவிழும் சூழல் ஏற்பட் டுள்ளது.