நாகர்கோவில், ஜூலை 8- இராஜாக்கமங்கலம் ஊராட்சிஒன்றியம் பள்ளம் ஊராட்சி யில் ஊரக வேலை செய்துவரும் தொழிலாளர்களின் வயதை காரணம்காட்டி, 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல நாட்களாக வேலை வழங்க மறுத்துவரும் ஒன்றிய நிர்வா கத்தை கண்டித்தும், வேலை வழங்கப்படாத தொழிலா ளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் புத னன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலா ளர் சங்கம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் எஸ்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இதில், மாவட்டத்தலைவர் என். எஸ்.கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.குமரேசன், எஸ்.மிக்கேல்நாயகி, சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை ஆகி யோர் பேசினர். பின்னர் அதிகாரியிடம் மனுகொடுத்து பேசப் பட்டது.