tamilnadu

திருநந்திக்கரையில் சூறைக்காற்றில் மரம் முறிந்தது 2 வீடுகள், 6 கடைகள் சேதம் இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூலை 5- குமரி மாவட்டத்தில் சனியன்று இரவு மிதமான மழையுடன் சூறைக் காற்று வீசியது. இதன்காரண மாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில பகுதிகளில் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு மின்சாத னங்கள் பழுதாகின. குலசேகரம் அருகே திருநந்திக்கரை பாலம் அரு கில் நூற்றாண்டு கடந்த ஆலமரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்து இரண்டு வீடுகளும், ஆறு கடை களும் சேதமடைந்தன. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. நல்வாய்ப்பாக உயிர்பலி ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டா லின்தாஸ், வட்டார செயலாளர் பி.விஸ்வாம்பரன், சசி குமார், மோகன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி னர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை உயி ரிழப்பு ஏற்படுவதற்குள் அகற்ற மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு நாகர்கோவில் அருகே வட்டக்கரை காமராஜர் சாலையில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் வெடித்து சிதறி நாசமாயின. ஒரு வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மின் இணைப்பு கம்பிகள் எரிந்து வீட்டினுள் தீ பிடித்தது. அருகில் உள்ளவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்த னர். மேலும் அந்த பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடு களில் டிவி, ப்ரிட்ஜ், அலங்கார மின் சாதன பொருட்கள், மின்விளக்குகள் போன்றவை உயர் அழுத்த மின்சா ரத்தால் நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்த போதும் அதிகாரிகள் யாரும் இது வரை வந்து பார்க்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த பகுதியில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க மின் வாரிய அதிகாரிகளும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.