அறந்தாங்கி, ஜன.8 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி தாலுகா, பெருமருதூர் வருவாய் கிராமம், கார்கமங்கலம் வட்டம், நெல்வேலி ஊராட்சி, பயமறியானேந்தல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஏக்கர் சம்பா சாகுபடி செய்தி ருக்கிறார்கள். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து அறு வடைக்கு தயாராக உள்ள பயிர்கள், நெல் முற்றியுள்ள நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெற் கதிர்கள் அழுகும் நிலை யில் உள்ளன. பயமறியா னேந்தல் பகுதியில் சுமார் 50 ஏக்கர் வரை பயிர்கள் பாதிக் கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், மணமேல்குடி ஒன்றியச் செய லாளர் கரு.இராமநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேகர், காளிதாஸ், செல்வம், அசார் உள்ளிட்டோர் விவசா யிகளுடன் வயலில் இறங்கி பார்வையிட்டனர். மாவட்ட செயலாளர் கவி வர்மன் கூறுகையில், பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, திங்களன்று (ஜன.10) மண மேல்குடி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.