நாகர்கோவில், ஜூன்.20- குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புளியடி கிராமத்திலுள்ள குளத்தில் குடி மராமத்து பணி திட்டத்தின் கீழ் மண் எடுத்து கரையை பலப்படுத்த திட்டமிடப்பட்டு இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக குளத்திலிருந்து மண் எடுத்து கரையை பலப்படுத்துவதற்கு பதி லாக அதே பகுதியை சேர்ந்த சோமு என்பவர் குளத்தில் இருந்து எடுக்கும் மண்ணை அரு கிலுள்ள தோட்டங்களுக்கு விலைபேசி கொண்டு சென்றதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து நீர்வள ஆதார அமைப்பு அதி காரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்ப டையில் அதிகாரிகள் வடசேரி காவல் நிலை யத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வடசேரி காவல் துறையினர் குளத்திற்கு சென்று பார்த்தபோது கரையை பலப் படுத்த மண் கொட்டப்படாமல் மண்ணை விலைபேசி தோட்டங்களுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குளத்தில் இருந்து மண் எடுத்துக் விலைபேசி வேறு நபர்களின் தோட்டங்களுக்கு கொண்டு சென்று கொண்டிருந்த 5 டிராக்டர்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சோமு, கண்ணன், பால்மணி, சார்லஸ், மணிகண்டன் உட்பட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.