tamilnadu

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமறைவு

நாகர்கோவில்,  ஜூலை 29- குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியை சேர்ந்த  15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் கோட்டார் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசா ரணை செய்து அந்த வாலிப ரிடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் குழந்தைகள் நல குழு அதிகா ரிகளிடம் சிறுமியை ஆஜர் படுத்தினர். அங்கு அந்த சிறுமி, கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பி னர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலி யல் தொல்லை அளித்ததாக வாக்குமூலம் அளித்துள் ளார். இதனை தொடர்ந்து அதி காரிகள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர் பாக புகார் அளித்தனர். இதனையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்து கொண்ட நாஞ்சில் முருகேசன் தலை மறைவானார். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறை வாகி உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.   இதற்கிடையில், நாகர் கோவிலில் உள்ள அவரது வீட்டை காவல் துறையினர் சுற்றி வளைத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர்.  மேலும்,  நாஞ்சில் முருகேசன் திங்க ளன்று அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.