tamilnadu

img

ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000 வழங்குக: குமரியில் 31 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்: கொரோனா ஊரடங்குகால வாழ்வாதார நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 மாதந்தோறும் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம், வில்லுக்குறி, கண்டன்விளை, கருங்கல், தடிக்காரன்கோணம், அழகியபாண்டிபுரம், இனயம் புத்தன்துறை,  எஸ்.டி.மங்காடு உட்பட கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகி அருள், லாசர், ஜெயந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர குழு உறுப்பினர்கள் மனோகர் ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சார்லஸ், மாவட்ட பொருளாளர் சுனில் குமார், துணைத்தலைவர்கள் ராமச்சந்திரன், விஜிலா, தமிழ்செல்வன், துணை செயலாளர்கள் ஜெயானந்த், ஷீஜா ஆகியோர் உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.