நாகர்கோவில், ஆக.29- நிதி நிறுவன நிர்வாகிகள் சுய உதவி குழு உறுப்பினர்க ளை கைபேசி மூலமாகவும், ஆபாசமாக பேசி மிரட்டு வதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளரிடம் மனு அளிக்கப் பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: நாகர்கோவில் பகுதி யில் இயங்கி வரும் நிதி நிறு வனங்கள் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என கடன் வழங்கி வருகின்றன. பெண்கள் குழுக்களில் இருந்து கடன் பெற்று சுய மாக தொழில் செய்து வரு கின்றனர். கொரோனா நோய் தொற்றினால் இந்த குழுக்க ளின் உறுப்பினர்கள் கடந்த பல மாதங்களாக தொழில் செய்ய இயலாமலும், பொது போக்குவரத்து வசதிகள் இல்லாமலும் வருமானம் ஏதுமின்றி தவிக்கிறார்கள். ஆதலால் குழுக்களின் உறுப்பினர்களால் கடன் தொகையை செலுத்த முடிய வில்லை. தவணை செலுத்தாத காரணத்தினால் நிதி நிறுவன நிர்வாகிகள் சுய உதவிக்கழு உறுப்பினர்களை கைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து மிக மோசமாகவும், ஆபா சமாகவும் பேசி மிரட்டி யும் வருகிறார்கள். இதனால் சுயஉதவிக்குழு பெண் உறுப்பினர்கள் கௌரவமா கவும், பயமின்றியும் அமைதி யாகவும் வாழ வழியின்றி இன்னலில் வாழ்ந்து வருகி றார்கள்.
சுய உதவிக்குழு பெண் உறுப்பினர்கள் வேறு வழியின்றி உள்ளனர். இவ்வாறு மாவட்டம் முழுவ தும் குழு கடன் பெற்றவர் கள் திருப்பி செத்த இய லாத சூழலில் உள்ளனர். ஆனாலும், நிதி நிறுவனங் கள் வட்டிக்கு மேல் வட்டி யும் கணக்கில் கொண்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் சுய உதவி க்குழுக்களின் உறுப்பினர்கள் கட்ட வேண் டிய தவணை தொகையை அபராதமின்றி கட்டுவதற்கு கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும் வரை சம்ப ந்தப்பட்ட அனைத்து குறு, சிறு நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் அதிக வட்டியும் சேர்த்து வசூலில் ஈடுபட்டு மக்களை சித்திரவதை செய்வதிலிருந்து பாதுகாப்பு நல்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிதி நிறுவனங்களின் கொள்ளை நடவடிக்கைகளை கண்டி த்து தொடர் இயக்கங்கள் நடத்திட முடிவு செய்து முதல் கட்டமாக 01-09-2020 புதன் பிற்பகல் 2.30 மணிக்கு வாத்தியார்விளையில் செயல்படும் எல்&டி சுய உதவிக்குழு அலுவலகம் முன்பு கண்டன இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டு ள்ளது என அதில் கூறப்பட் டுள்ளது. இந்த மனுவை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எம்.அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.அந்தோணி உள்ளிட் டோர் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் அளித்த னர்.