நாகர்கோவில், ஆக.24- நீதிமன்றங்களை உடனடியாக திறந்து நீதிமன்றங்க ளில் வழக்குகளை நடத்த வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தி திங்களன்று நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, நாகர்கோவில் வழக்கறி ஞர் சங்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் சங்க தலைவர் வெற்றிவேல், முன்னாள் செய லாளர் அ.மரியஸ்டிபன், வழக்கறிஞர்கள் செல்வகுமா ரன், மகேஷ், முத்துக்குமார், சார்லஸ், பிரேம், ஜான்சன், சகின், ஜோஸ்வாரூபஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.