tamilnadu

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா

குழித்துறை, ஜன.29- சொந்த மண்ணில் மக்களை அன்னியராக்கி நாடற்றவர்க ளாக்கும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குழித்துறையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்பு களும் நடத்தி வரும் போராட்டங்களில் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகிறார்கள். குழித்துறையில் செவ்வாயன்று சிபிஎம் சார்பில் நடந்த மாலை நேர தொடர் முழக்கத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.விஜயமோகன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு, வட்டாரக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.