tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது

உளுந்தூர்பேட்டை. நவ, 7-  உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் பேரூ ராட்சி பகுதிக்கு உட்பட்ட புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் 394 குடும்பங்  களை காலி செய்வதற்கு முயற்சிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் நடவ டிக்கையை கைவிடக் கோரி யும், பல தலைமுறைகளாக குடியிருக்கும் குடும்பத்தின ருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரியும்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின்  சார்பில் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் போராட் டக் குழுவினருடன் அதிகாரி கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இப்பேச்சுவார்த்தையில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்  தலைவர் பி.சுப்பிரமணியன், செயலாளர் டி.எம்.ஜெய்  சங்கர், நகரச் செயலாளர் ஏ.கே.முருகன், தலைவர் கே. மனோகரன், சிறுபான்மை  நலக்குழு மாவட்டச் செய லாளர் ஐ.ஷேக்சலாவுதீன் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிட்டோ ரும், அரசு சார்பில் உளுந்  தூர்பேட்டை வட்டாட்சியர், காவல் துணை கண்கா ணிப்பாளர், பேரூராட்சி அலு வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் அரசாணை எண் 318ன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை யின் மூலம் ஒருமுறை சிறப்பு  திட்டத்தின் கீழ் பாளை யப்பட்டு பகுதியில் வீடு கட்டி  வசிக்கும் சுமார் பதினைந்து நபர்களுக்கு வீட்டுமனைகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆட்சேபனை உள்ள இடங்க ளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை வழங்கி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பது என்றும், இதனை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்வது எனவும் எழுத்து மூலமான உடன்படிக்கை ஏற்பட்டது. அகில இந்திய விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத்தின்  சார்பில் இந்த உடன்பாட்  டினை பாதிக்கப்பட்டோ ருக்கு கூறுவதற்கான விளக்கக் கூட்டம் போராட்ட நாளான நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. சங்  கத்தின் மாநிலச் செயலா ளர் எம்.சின்னதுரை சிறப்பு ரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது புதிதாக அமைக்  கப்பட்ட 23 பேர் கொண்ட நகர கமிட்டிக்கு தலைவராக கே.மனோகரன், செயலாள ராக ஏ.கே.முருகன், பொரு ளாளராக சி.ரமேஷ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.