காஞ்சிபுரம், மார்ச் 2- காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் உள்ளன. இவர்களுக்கு இதுவரை முறையான சங்கம் எதுவும் இல்லை. இதனால் காவல்துறையின் கெடுபிடிகள் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிஐடியு-வின் முன் முயற்சியால் தேநீர் கடை உரிமையாளர்களின் கூட்டம் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மதுசூதனன் தலைமையில் ஞாயிறன்று (மார்ச் 2) நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட தேநீர் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனை கள் குறித்து விவாதித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் சங்கத்தின் அவசியம் குறித்து பேசினார். இந்தக் கூட்டத்தில் தேநீர் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் கிளைத் தலைவராக அண்ணாமலை, செயலாளராக ஆர்.மதுசூதனன், பொருளாளராக வி.குமார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.