காஞ்சிபுரம், ஏப்.17-காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4122 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 236பதற்றமான வாக்குசாவடிகள். 1357 வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள்மூலம் கண்காணிக்கப்படுகின்றன.வாக்குசாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாககட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கண்காணிக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தலில் 20,500 வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 4122 வாக்குசாவடிகளுக்கும் தலா 4 பேர் வீதம் பணிபுரிவர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 6 பேர் பணியில் இருப்பர்.அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரியஉள்ளனர்.
3298 வாக்குசாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்படுவர்.வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும்கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் 578 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.வெளி மாவட்ட கட்சியினர் அவரவர் ஊர்களுக்குவெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133 வதுபிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.திருமண மண்டபம், தங்கும்விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கி கட்சிப்பணியில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வியாழனன்று (ஏப்.18) நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.தலைவர்களின் பிரசாரங்களில் சர்ச்சை பேச்சுக்களால் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பெரும்புதூர் தொகுதியில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.