காஞ்சிபுரம்,டிச.2 வன்முறையற்ற போதை யற்ற தமிழகம் என்ற முழக்கத்தோடு கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு ள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நடைபயணக்குழுவிற்கு காஞ்சிபுரத்தில் சிஐடியு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சங்கர மடம், மண்டபம் தெரு, ஆலடி தோப்பு, ரங்கசாமி குளம், மூன்றாம் திருவிழா மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் தேநீர் கொடுத்தும் கதராடை அணிவித்தும் சிஐடியு சார்பில் தொழிலாளர்கள் நெசவாளர்கள் வரவேற்பு அளித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலப் பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடைபயணத்தில் பங்கேற்றுள்ளவர்களை வாழ்த்திப் பேசினர்.