ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஓட்டுநர்களுக்கு ஆட்டோ - டாக்சி ஓட்டுனர் சங்கத்தின் (சிஐடியு) மதுரவாயல் (கிழக்கு) பகுதி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் முகமது அனிபா, பகுதித் தலைவர், சி.முருகன், செயலாளர் கே.ரத்தினகுமரன், பொருளாளர் ஜெ.பாபு, சிபிஎம் மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் பொருட்களை வழங்கினர்.