tamilnadu

அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை: சிஐடியு வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜூன் 25- கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள ஆலை களில் உள்ள தொழிலா ளர்கள் அனைவருக்கும் பரி சோதனை செய்ய வேண்டும்  என்று சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துகுமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் பா.பொன்னை யாவிற்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியருப்பதாவது: காஞ்சிபுரத்தை சுற்றி  உள்ள தனியார் மருத்துவ மனைகளையும் கொரோனா  சிகிச்சை அளிப்பதற்கு தற் காலிகமாக கையகப்படுத்த வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களைக் கொண்ட  நோய்த்தடுப்பு ஆலோச னைக் குழு ஒன்றை அமைக்க  வேண்டும். ஹூண்டாய், நோக்கியா  நெட்வொர்க், பிஎம்டபிள்யூ, அப்பல்லொ டயர், ஜேகே டயர், நோபில் டெக், ஃபோடு, வேலியோலைட்டிங் உள் ளிட்ட நிறுவனங்களில் பணி யாற்றும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது. தொற்று  கண்டறியப்பட்ட ஆலை களில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ள  மூன்று மாத காலத்திற்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் வழங்க உத்தர விட வேண்டும். முழுமையாக  ஆலையை மூட வேண்டிய  சூழல் வரும் நிலையில், வேலை இல்லாத காலத்திற் கான முழுமையான சம்ப ளத்தையும் வழங்க அந்த நிறு வனங்களுக்கு உத்தரவிட  வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.