tamilnadu

img

அச்சுறுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல் போக்குவரத்து ஊழியர் சங்க பேரவையில் தீர்மானம்

காஞ்சிபுரம், மே 21-அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் 19 ஆவது ஆண்டு மண்டலபேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் மாநாட்டுக் கொடியினை ஏற்றினார். சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மாநாட்டை துவக்கிவைத்தார். துணை பொதுச் செயலாளர் வி.சிவலிங்கம் வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் எஸ். மாயக்கண்ணன் அஞ்சலி தீர்மானமும், பொருளாளர் ஜி. கமலக்கண்ணன் வரவு - செலவு அறிக்கையையும் வாசித்தனர்.பொதுச் செயலாளர் என்.நந்தகோபால் தொகுப்புரை வழங்கினார். சிஐடியு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் நிறைவுரையாற்றினார். துணைத் தலைவர் டி.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.தொழிலாளர்களின் பிரச்சினைக்காக போராடிய சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக்குமாரை விடுதலை செய்யவேண்டும், நகர பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க வேண்டும், தன்னிச்சையாக கிலோமீட்டர் இயக்க தூரத்தை நீட்டித்து தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், புதிய தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள்தலைவராக பா. சுந்தர்ராஜன், பொதுச் செயலாளராக என். நந்தகோபால், பொருளாளராக ஜி.கமலக்கண்ணன் உள்ளிட்ட 27 பேர் கொண்ட துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.