tamilnadu

img

பெற்றோரை அச்சுறுத்த முயன்ற சிறுவன் மரணம்

காஞ்சிபுரம், ஜூன் 13- தொலைக்காட்சி பார்க்கக் கூடாது என கண் டித்த பெற்றோர்களை அச்சு றுத்த கழுத்தில் துணியை மாட்டி கொண்டு தற் கொலை நாடகம் ஆடிய சிறு வன், பரிதாபமாக உயிரி ழந்தான். காஞ்சிபுரம் பெருநக ராட்சிக்கு உட்பட்ட புதுப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவர்  களுக்கு 14வது வயதில் ஒரு மகளும் 13 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். ஊரடங்கால் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட முடி யாத நிலை உள்ளது. இத னால் குழந்தைகள் தொலைக்  காட்சி பார்த்தபடி அல்லது  செல்போனில் விளையாடிய படி உள்ளன. அதைப் போலவே, ஏகாம்பரத்தின் மூன்று பிள்ளைகளும் வெள்ளிக்கிழமை இரவு  (ஜூன் 12) தொலைக்காட்சி யைப் பார்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது ஏகாம்பரத் தின் மனைவி, தொலைக் காட்சியை தொடர்ந்து பார்க்க கூடாது என கண் டித்துள்ளார். இதனால் கோப முற்ற இரண்டாவது பிள்ளை  ஜெயசந்திரன்(13), நெசவு  கருவி மீது ஏறி துணியை எடுத்து கழுத்தில் மாட்டி  கொண்டு பெற்றோர்களை அச்சுறுத்த முயற்சித்துள் ளான். அச்சமயம் கால் தவறியதில் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த துணி இறுகி தொங்கினான். சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்  சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்ட தாக கூறினர். இது தொடர்  பாக சிவகாஞ்சி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.