காஞ்சிபுரம், டிச.13-காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் நகரக்குழு சார்பில் பல இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது. பிள்ளையார் பாளையத்தில் நாகவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், நகர செயலாளர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் எ.வாசுதேவன், என். நந்தகோபால், நகரக்குழுஉறுப்பினர்கள் ஒய்.சீதாராமன், சி.மகேந்திரன், இ.பாண்டியன், லட்சுமிபதி, எம். வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆலடி கேட் பகுதியில் எம். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எ.வாசுதேவன், நகர குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும்திருக்காலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.