tamilnadu

img

மாநிலத்துக்கு வெளியே எப்போது பேருந்து? முதல்வர் விளக்கம்

காஞ்சிபுரம்:
கொரோனா தொற்று குறைந்த பிறகே மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காஞ்சிபுரம், செங் கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி சிறு, குறு தொழிற்சாலை பிரதிநிதிகள் விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” மாநில அரசு கொரோனாவை தடுக்க முயற்சிகளை எடுத்து வருகிறது” என்றார்.

நோய் தொற்று இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழு அந்த பகுதிக்கே சென்று அங்குள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிகுறி இருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்ல முறையில் குறைந்தால் மாநிலங்களுக்கு இடையிலான போக்கு
வரத்து தொடங்கும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள் ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இருப்பினும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி அமைப்பதுதான் அரசின் கடமை. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் தொடங்கப் பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க சுகாதாரத் துறை சார்பில் அனுமதி கேட்கப் பட்டுள்ளது.அனுமதி கிடைத்ததும் காஞ்சிபுரத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். காஞ்சிபுரம் ஜரிகை இங்கேயே வாங்க வழிவகை செய்யப்படும். காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பேருந்து நிலையம், காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கூறினார்.