காஞ்சிபுரம்,அக்டோபர்.09- கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தி வந்த சாம்சங் தொழிலாளர்கள், சிஐடியு தலைவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது.
நேற்று நள்ளிரவில் தமிழ்நாடு காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்களை வீடுகளுக்குச் சென்று மிரட்டி கைது செய்து, போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்த பந்தல்களையும் அகற்றி போராட்டம் நடத்தக்கூடாது என தொழிலாளர்களை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தி வந்த தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், முத்துகுமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.