tamilnadu

img

சாம்சங் நிறுவனத்தின் அராஜக போக்கை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம்,மார்ச்.07- வேலை கொடு என்ற கடிதத்தோடு சாம்சங் ஊழியர்களை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பலகட்ட போராட்டம், சட்டப்போராட்டம் நடத்தி தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமையை பெற்றனர்.
இந்நிலையில் சங்கத்தில் உள்ள ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் பலி வாங்கும் செயலில் ஈடுபட தொடங்கியது. அதில் ஒன்றுதான் 23 ஊழியர்களை எந்த ஒரு காரணமும் இல்லாமல் பணியிடைநீக்கம் செய்தது, பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகத்தினர் ஒத்துவராததால் சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கூறுகையில், சாம்சங் நிர்வாகம் சட்டவிரோதமான காரியங்கள் செய்தது சம்பந்தமாக சாம்சங் தொழிலாளர்கள் தொடர் வேற நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வேலை நிறுத்த தொடர்பாகத் தொழிலாளர் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் 23 தொழிலாளர்கள் பணியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வேலைக்குச் செல்லுமாறும், தொழிலாளர் நலத் துறை ஆலோசனை வழங்கியது. அதே போன்று தொழிற்சாலை நிர்வாகமும் மற்றவர்கள் வேலைக்கு வரட்டும் என பேச்சு வார்த்தையில் தெரிவித்தனர். தொழிலாளர்கள் வேலைக்கு மீண்டும் திரும்புவதாக இரண்டு தினங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் சாம்சங் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு காலமுறை பணி, உணவு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக வியாழனன்று (மார்ச்.6) தொழிலாளர் நலத்துறையினர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நிர்வாகம் தொழிலாளர்கள் தனித்தனியே மன்னிப்பு மற்றும் இனி போராட மாட்டோம். என கடிதம் எழுதி தர வேண்டும் என நிர்வாக தரப்பு கூறியது. அதற்கு தொழிலாளர்கள் கடிதங்கள் எழுதி தர முடியாது மேலும், வெள்ளியன்று காலை 7:00 மணிக்குத் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்புவோம். எனத் தெரிவித்திருந்தோம் அதன் அடிப்படையில் வெள்ளியன்று தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பி வந்துள்ளோம். 
மேலும் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதை தடுப்பது சட்டப்படி குற்றம் இருக்கும்போது சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் காவல்துறையும், செக்யூரிட்டி வைத்து தொழிலாளர்களை தடுத்து நிறுத்துகின்றனர். இதுவரைக்கும் மன்னிப்பு கடிதம் இனி போராட்டம் என கடிதம் எழுதி தர சொன்ன நிர்வாகம் தற்போது காவல்துறை துறையினரிடம், தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்களின் அடையாள அட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் அடையாள அட்டை தற்காலிக தடையை நீக்கி பணிக்கு திரும்புவதாக கடிதம் எழுதி தர வேண்டும் அதன் பிறகு பணிக்கு அனுமதிக்கிறோம். என நிர்வாக தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. அதனை முறைப்படி சாம்சங் நிர்வாகம் செய்ய வேண்டும். என கேட்டுக்கொண்டார். மேலும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளிகளின் தவிர மற்ற அனைவரும் பணிக்கு திரும்புவார்கள் என இவ்வாறு அவர் கூறினார்.