கள்ளக்குறிச்சி:
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத எடப்பாடி அரசு ஊர் ஊராக சிறப்பு குறை கேட்பு கூட்டம் நடத்துவது யாரை ஏமாற்றுவதற்கு என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார்.கள்ளக்குறிச்சி வட்டார மக்கள் கோரிக்கை மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற் றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியில் உள்ளவர்களால் குடியிருக்க வீடு, பட்டா, குடிநீர் என எதையும் தர முடியவில்லை. கேவலம் இறந்தபின் புதைப்பதற்கான சுடுகாடுகூட பல இடங்களில் கிடையாது. மக்கள் வறுமையில் உழல்கின்றனர்” என்றார்.முதியோர் ஓய்வூதியம் 38 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக வருவாய்த்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் தற்போது இதில் பாதி பேருக்குகூட கிடைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஒவ் வொரு மாவட்டத்திலும் ஆயிரக் கணக்கான மனுக்கள் குவிந்தும் பயனாளிகளுக்கு நிதியும், தங்கமும் கிடைக்கவில்லை. கரும்பு அனுப்பி அதற்கான பணம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத எடப்பாடி எதற்கு சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்துகின்றார்? என்றும் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மதவெறி மத்திய மோடி அரசை எதிர்க்க வலுவான முதுகெலும்பு உள்ளவர்களால்தான் முடியும். எனவே விலைவாசி உயர்வால் வாடும் மக்களை பாதுகாத்திட, விவசாய விளைபொருட்களுக்கு உரியவிலை அரசுகளிடம் போராடிப் பெற் றிட, கடன் தொல்லையால் வாடும் வறியவர்களை பாதுகாத்திட போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்க வேண்டும்”. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
கௌரவிப்பு
பொதுக்கூட்ட நிறைவில், இக் கூட்டத்தில் பங்கேற்ற கல்வராயன்மலை மக்களுக்காக தன் வாழ்நாளைஅர்ப்பணித்த தோழர் கே.பாஷா ஜானின் மனைவி மற்றும் மகளுக்கு மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சால்வை அணிவித்து கௌரவித்தார். முன்னதாக புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது.கட்சியின் திருவெண்ணைநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.