tamilnadu

img

சிஏஏவை திரும்பப் பெறுக சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

சங்கராபுரம், மார்ச் 11-  தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும்  தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கள்ளக்குறிச்சி மாவட்ட 2  ஆவது மாநாடு சங்கரா புரத்தில் புதனன்று ( மார்ச் 11)  நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் ஏ.சிக்கந்தர் வரவேற்றார். சங்கராபுரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலை வர் அ.முகமதுரபி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஐ.ஷேக்சலாவுதீன்  வேலை  அறிக்கை முன்வைத்தார். மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன்  நிறைவுரை யாற்றினார். எம்.காதர்கான் நன்றி கூறினார். புதியநிர்வாகிகள்:- மாவட்டத் தலைவராக அ.பாபெரியசாமி, செயலாள ராக ஷேக்சலாவுதீன், பொரு ளாளராக ஏ.கே.ஜான் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கராபுரம் பேருந்து நிலைய நடைமேடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை நிர்வாகி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரை யாற்றினார்.