கள்ளக்குறிச்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து அரங்க சிஐடியு நிர்வாகி ஜி.ரமேஷ் ஆகியோரின் தாயார் ஜி.தனக்கோடி அம்மாள் புதனன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் மேமாளூரில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
மறைந்த தனக்கோடி அம்மாளின் உடலுக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், ஜி.மாதவன், மூசா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர், மாவட்டங்களின் சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர். பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.