கடலூர், செப்.21- கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணா டம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதி விவசாயிகளிடமிருந்து கடந்த 2017-19 ஆம் ஆண்டு கரும்பை கொள்முதல் செய்த தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த தொகையை உட னடியாக வழங்க வலியுறுத்தி யும், விவசாயிகளின் பெயர்க ளில் வங்கியில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஆலை தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்ப ளத்தை உடனே வழங்க வேண்டும் கோரியும் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை முன்பு செப்.18 ஆம் தேதி முதல் கடந்த நான்கு நாட்களாக கரும்பு விவசாயிகள் காத்தி ருப்பு போராட்டம் நடத்தி னர். அப்போது பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், “விவசாயிகளின் கோரிக் கையை நிறைவேற்றப்படா விட்டால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் முற்றுகையில் காத்தி ருக்கும் போராட்டம் நடை பெறும்” என்றார். இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாநி லச் செயலாளர் ராஜேந்தி ரன், வட்டச் செயலாளர் மகா லிங்கம், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் ராமலிங்கம், கோவிந்தராஜ், ராஜவேல், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.