சிதம்பரம், டிச.22- கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டை, குமராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்க ளுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குமராட்சி ஒன்றியம் 13 ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தனலட்சுமி மணிவண்ணன் குமராட்சி கீழ வன்னியூர், மேல வன்னியூர், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணி வண்ணன், புஷ்பராஜ், மூத்த தலை வர் மகாலிங்கம், திமுக குமராட்சி நகரச் செயலாளர் வீரபாஸ்கர், பெரு மாள், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீரப்பாளையம் ஒன்றியம் பண்ணப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சந்திரலேகா சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்திற்குவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர்டி.ஆறுமுகம் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடி கிராமம் வார்டு எண் 16க்கு ஒன்றிய கவுன்சிலர் போட்டியிடும் ஆர். கோபால கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிதம்பரம் நகரச் செயலா ளர் ராஜா, மாதர் சங்கச் செயலாளர் மல்லிகா, தலைவர் அமுதா, நகர் குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வார்டு 17க்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் விஜயலட்சுமி போட்டியிடுகிறார். இவர் பண்ண ப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, நகரக்குழு உறுப்பினர் செந்தில், வாலிபர் சங்கத் தலைவர் ராஜராஜன், கிளைச் செயலாளர்கள் குணசேகரன், கலைமணி ஆகியோர் கலந்து கொண்டனர். காட்டுமன்னார்கோவில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி போட்டியிடுகிறார். இவர் காட்டு மன்னார்கோவில் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வட்டச் செய லாளர் இளங்கோ, மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.