சிதம்பரம், மே 22-கடந்த ஆண்டு இதே நாளில் தூத்துக்குடி போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிதம்பரம் அருகே பி. முட்லூரில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி. மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், மூசா. மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், ஜி.ஆர் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், பிரகாஷ். ஒன்றிய செயலாளர்கள் ப. வாஞ்சிநாதன், மூர்த்தி, தண்டபாணி,ராஜேஷ்கண்ணன். சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத்துணைத் தலைவர் கோபால், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருவண்ணாமலையில் சிஐடியு அலுவலகம் அருகே நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.