சிதம்பரம், ஏப். 24-சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் பழனி பாபு வணிக அமைப் பும் இணைந்து சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு கட்டில்கள் உள்ளிட்ட உபகரண உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் தழிழரசன் தலைமை வகித்தார். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் முன்னிலை வகித்துப் பேசினார். சிறப்பு விருத்தினர்களாக தொழிலதிபர் பா.பழநி, பா.ஜோதிமணி பழநி ஆகியோர் கலந்து கொண்டு ரூ.1.50 லட்சம் மதிப்பில் படுக்கையுடன் கூடிய கட்டில்கள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினர். இதில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி, பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி இளங் கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அஷ்ரப்அலி, சிவசங்கரன், ராஜசேகரன், பொற்செல்வி, ரவிச்சந்திரன், சரவணன், பன்னாலால், ஹபிபுல்லா, டி.ஜே.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.