கடலூர், ஆக. 14- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புலியூர், பாலக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பணிக்கு வராத மருத்துவர்கள், செவிலியர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புலி யூர் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் கையூட்டு பெறுவதை தடுக்க வேண்டும், புலி யூர் தபால் அலுவலகத்தில் மக்கள் கட்டிய ஆர்.டி, எஸ்.பி, காப்பீட்டு தொகையினை சுருட்டிச் சென்ற அஞ்சல் அதிகாரி மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், ஆலடி பகுதியில் கூழாங்கற்களை கடத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பாலக் கொள்ளை பஞ்சாயத்திற்குட்பட்ட கலர்குப்பம் கிரா மத்தில் கசிவுநீர் குட்டை மற்றும் பெரிய ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இருளகுறிச்சி பஞ்சாயத்துக்குட் பட்ட நரசிங்க பெருமாள் கோயில் - பூண் யாங்குப்பம் இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர்கள் எஸ்.கணேசன், ஜி.வேலன், ஜி.வீரன், கே.மதியழகன், உதய குமார், என்.எஸ்.அசோகன், கே.எம்.குமர குரு, ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.