tamilnadu

பிசிஆர் பரிசோதனையை விரிவுபடுத்துக: 300 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 20- கடலூர் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனைகளை விரிவுபடுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 300 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கட்சியின்  மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று உறுதி செய்யும் பிசிஆர் பரிசோதனை இயந்திரம் கடலூர், விருதாச்சலத்தில் அமைக்க வேண்டும். வட்டார  மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிசிஆர் பரிசோதனை தின சரி மேற்கொள்ள வேண்டும்.  நடமாடும் வாகனங்களில் பிசிஆர் முகாம்களை தேவை யான நகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் நடத்திட வேண்டும். கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு  கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் சித்த  வைத்திய சிகிச்சை மையங்  கள் அமைக்க வேண்டும். மகளிர் காவல் நிலையங்கள், சமூக நலத்துறையில் கிடப் பில் உள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த மனுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கட லூர் மாவட்டம் முழுவதும் ஜூலை 23ஆம் தேதி  300 மையங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.