சிதம்பரம்,மே 24-நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்டதில் 37 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திக் திக்... அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் இருந்தார். ஆனாலும் வித்தியாசம் மிகக் குறைந்த அளவே இருந்தன. பின்னர் திருமாவளவன் முன்னிலைக்கு சென்றார். இந்த முன்னிலை மாறி மாறி வந்தது. ஆனால் இருவருக் கும் வித்தியாசம் மிக சொற்பமாக இருந்தது.மாலை 5 மணிக்கு மேல் திருமாவளவன் மீண்டும் முன்னிலை வகித்தார். இரவு 9 மணி நிலவரப்படி 19-வது சுற்றில் 9544 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். 10 மணிக்கு மேல் திக் திக் வினாடிகள் ஆரம்பமானது. இரவு 11 மணிக்கு முன்னிலையில் இருந்த திருமாவளவன் பின்னடைவு என தகவல்கள் பரவியது. தேர்தல் அதிகாரிகளும் திருமாவளவனின் வெற்றியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.இதனையடுத்து, திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட் டனர். பதற்றம் அதிகரித்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது. இது பதற் றத்தை அதிகரித்தது. பிறகு, இரவு 11.30 மணிக்கு திருமாவளவன் 3,186 வாக்குகள் முன்னிலை என தகவல் வந்தது. இறுதியாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டதில் திருமா 5,00, 229 வாக்குகளும், அதிமுக வேட் பாளர் 4,97,010 வாக்குகளை பெற்றனர்.3, 219 வாக்குகள் அதிகம் பெற்று திருமாவளவன் வெற்றிபெற்றதாக நள்ளிரவையும் கடந்து அதிகாலை 2. 50 -க்கு அறிவிக்கப் பட்டது. இதன்பிறகு பதற்றம் தணிந்தது.திமுக கூட்டணி கட்சியினர் திருமாவளவனின் வெற்றியை வெடிவெடித்து கொண்டாடி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.சிதம்பரம் தொகுதியின் வாக்கு எண் ணிக்கை நிலவரத்தை மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் திக் திக் என அமைந்தது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் முடியும் வரை அங்குலம் அங்குலமாக எதிர் முகாமை அதிரவைத்தது.