சிதம்பரம், ஜூன் 21- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகேயுள்ள நத்தமலை கிராமத்தில் வசித்த வர் இளையரசன் (43). இவர் குவைத் நாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி இளை யரசன் இறந்து விட்டதாக அவரது மனைவி அம்பிகாவிடம் 19ஆம் தேதி தகவல் தெரி வித்துள்ளனர். இறந்தவுடன் தகவல் கூறாமல் 5 நாட்கள் கழித்து தகவல் கொடுத்துள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரிய வில்லை. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியரி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தொலை பேசியில் வலியுறுத்தினார். இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தி அவரின் உடலை எடுத்து வர நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அன்புசெல்வன் தெரி வித்தார். இதற்கிடையே கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.