சிதம்பரம், மார்ச் 11- கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக சிதம்பரம் பகுதியில் பொது மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், சினிமா தியேட்டர், காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நடவடிக்கையில் நகராட்சியினர் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பர வியது. இதன் எதிரொலி யாக சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்திரவின்படி அதிகாரி கள் தனிக்குழு அமைத்து கொரோனா வைரசிலி ருந்து பாதுகாப்பு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். முதல் நடவடிக்கையாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் பால்டேவிட்ஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் காமராஜ், ராஜா ராம், பாஸ்கர், தில்லைநாய கம்,ஒப்பந்த மேலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணி யாளர்கள் மற்றும் ஊழியர் கள் கொண்ட பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையம், சினிமா தியேட்டர், பள்ளிகள், மேலவீதி, கீழ வீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி மருந்தை தெளித்தனர். மேலும் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து பேருந்துகளின் இருக்கை களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பள்ளி, மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் கொரோனா வைரசில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றி நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.