கடலூர், செப்.24- கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்த போது, லாரியை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது அவரை நிறுத்தச் சொல்லியுள்ளனர். ஆனால், அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காவலர் ஜெயபால், மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது லத்தியை வீசியுள்ளார். இதனால் தலையில் அடிபட்டதால் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். ரத்தம் சொட்ட, சொட்ட வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலையில் 8 தையல் போடப்பட்டுள்ளது. பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காயமடைந்தவர் வேப்பூரை அடுத்த என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த காது கேளாதா, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சங்கர் (47) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து லத்தி வீசிய காவலரிடம் வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.