கடலூர், ஜூலை 18- 12ஆம் வகுப்பு தேர்ச்சி 60 சதவீதத்திற் கும் குறைவாக இருந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில், கடலூர் மாவட்டம் 86.33 சதவீதத் தேர்ச்சியுடன் மாநிலத்தில் கடைசி இடத்திற் குத் தள்ளப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 114 அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதி யவர்களில் 76.76 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதே நேரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகள் 89.33 சதவீதமும், மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் 98.61 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. எனவே, 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்த மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளிக்கிழமை கடலூ ரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.ரோஸ்நிர்மலா தலைமையில் விளக்கம் கேட்கும் கூட்டம் முதன்மைக்கல்வி அலுவ லர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் சுமார் 20 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பள்ளியில் எத் தனை மாணவ,மாணவிகள் படிக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மதிப்பெண் பெற்றனர் என்ற விபரத்தையும், தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான கார ணத்தையும் ஒவ்வொரு ஆசிரியரும் தனித் தனியாக எழுதி ஆட்சியருக்கு சமர்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், பள்ளியில் எத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள் என்ற விபரத்தை யும் அதில் குறிப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் கருத்திற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இதற்கு அடுத்த கட்டமாக மாவட்ட சரா சரிக்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளி களின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து அறிக்கை கோரப்படும் என்று தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடைசி இடத்தைப் பதிவு செய்துள்ள கடலூர் மாவட் டம் தேர்ச்சி விகிதத்தில் கடந்தாண்டில் 88.03 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றிருந்தது. தற்போது சுமார் 2 சதவீதத் தேர்ச்சி குறைந் துள்ளது. கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.