ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 99 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மாய்மாகி உள்ளனர்.
ஜப்பானின் ஹோன்ஷூ தீவை, நேற்று இரவு 7.00 மணிக்கு ஹகிபிஸ் புயல் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் தாக்கியது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த புயல் என்று கூறப்படுகிறது. புயல் மற்றும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 99 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.
இதுவரை, 50,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் உலகக் கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.